நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மாத்தளை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக குறித்த பெண் போட்டியிடவுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய குறித்த ஜேர்மன் நாட்டு பெண் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக குறிப்பிட்டார்.