‘இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று செய்ற்பாட்டு அரிசியலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன்.
மகிந்த ராஜபக்ச அணியில் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்சவுடன் எதிர்வரும் நாட்களில் பயணிக்க எதிர்பார்க்கின்றேன்.
2015ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் இந்நாடு பின்னோக்கி சென்றதாகவும் அதற்கு காரணம் அவர்களை திருடர்கள் என போலியாக குற்றம் சுமத்தியமையே ஆகும்.
இந்த நாட்டை நடத்துவதில் அதிக அனுபவம் கொண்ட குழு அதுதான்.
இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் வழிநடத்தத் தயாராக இருக்கிறோம்.
சட்டத்தை அமுல்படுத்துங்கள், அரசியல் வேட்டையை நிறுத்துங்கள் என்று தெரிவித்திருந்தார்.