19.5 C
Scarborough

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!

Must read

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!

லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர்.

பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா பொருள்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார்.

அவர் பதவி விலகியதை தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 59 வயதான மார்க் கார்னி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 674 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11 ஆயிரத்து 134 வாக்குகளையும், கரீனா கோல்ட் 4 ஆயிரத்து 785 வாக்குகளையும் பெற்றனர்.
இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி, கடந்த 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார்.

அத்துடன், 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொடனால்ட் டிரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக கனடா நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article