15.4 C
Scarborough

சீ​னா​வில் 10 இலட்​சம் தொன் தோரி​யம் கண்​டு​பிடிப்பு

Must read

சீ​னா​வின் உள்​மங்​கோலியா பகு​தி​யில் 10 இலட்​சம் தொன் தோரி​யம் தாது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது. இதன்​மூலம் சீனாவில் 60,000 ஆண்​டு​களுக்குத் தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து சர்​வ​தேச அணு சக்தி விஞ்​ஞானிகள் கூறிய​தாவது:

“அணு மின் உற்​பத்​தி​யில் யுரேனி​யம், புளூட்​டோனி​யம் தாதுக்​களுக்கு அடுத்​த​தாக தோரி​யம் தாது மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. தோரி​யத்தை பயன்​படுத்தி மேற்​கொள்​ளப்​படும் அணு மின் உற்​பத்​தி​யின்​போது சுற்​றுச்​சூழல் ​பெரிய அளவில் பாதிக்கப்ப​டாது.மின் உற்​பத்திச் செலவும் குறையும்.

அணு மின் சக்தி தொழில்​நுட்​பத்​தில் அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா இடையே போட்டி நில​வு​கிறது. இதேவேளை சீனா​வின் கோபி பாலை​வனப் பகு​தி​யில் தோரி​யம் அணு மின் நிலை​யத்தை சீன அரசாங்கம் அமைத்து வரு​கிறது. இந்த அணு மின் நிலை​யம் வரும் 2029ஆம் ஆண்டு முதல் செயற்​படத் தொடங்​குமென்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதே​போல பல்​வேறு பகு​தி​களில் தோரி​யம் அணு மின் நிலை​யங்​களை அமைக்க சீனா திட்​ட​மிட்​டுள்​ளது. யுரேனி​யத்​துடன் ஒப்​பிடும்​போது தோரி​யத்​தில் இருந்து 200 மடங்கு அதிக மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடியும்” ​. ​ என்று தெரி​வித்​துள்​ளனர்​.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article