5.4 C
Scarborough

ஜனாதிபதி ட்ரம்பால் மீண்டும் ஆட்சிக்கு வரும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி

Must read

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற சூழல் தற்போது கனடாவில் உருவாகியுள்ளது.

2 சதவிகிதம் முன்னிலை

கனடாவின் லிபரல் கட்சி, நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சியை பின்னுக்குத் தள்ளி, பிரமிக்க வைக்கும் வகையில் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.

சமீபத்திய Ipsos ஆய்வுகளின் அடிப்படையில், லிபரல் கட்சி தற்போது கன்சர்வேடிவ் கட்சியை விட 2 சதவிகிதம் முன்னிலை பெற்றுள்ளனர். அதாவது ஆறு வாரங்களுக்கு முன்பு அவர்கள் 26 சதவிகிதம் பின்னடைவை எதிர்கொண்டு மிக மோசமான கட்டத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை சாதித்துள்ளனர்.

லிபரல் கட்சியின் இந்த வியத்தகு திருப்பத்திற்கு காரணம் கனடாவில் பரவி வரும் ட்ரம்ப்-எதிர்ப்பு உணர்வுகளே என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் பிராந்திய விரிவாக்கம் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உக்கிரமான நிலைப்பாடு கனேடிய மக்களின் தேசபக்திக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது.

ட்ரம்பின் முரட்டுத்தனமான கொள்கைகளுக்கு எதிராக கனேடிய தங்கள் அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டனர். சில வாரங்களுக்கு முன்னர் லிபரல் கட்சியின் நிலை பரிதாப கட்டத்தில் இருந்தது.

லிபரல்களுக்கு ஆதரவாக

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு மற்றும் பொதுமக்களிடையே செல்வாக்கு சரிவு உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி 7 அன்று ராஜினாமா செய்தார்.

இது லிபரல் கட்சிக்கான முடிவுரையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுகளால் லிபரல் கட்சியின் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறிவிட்டது, சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர்.

பிப்ரவரி 25ம் திகதி Ipsos முன்னெடுத்த ஆய்வில் 38 சதவிகித வாக்காளர்கள் தற்போது லிபரல்களுக்கு ஆதரவாக உள்ளனர், அதே நேரத்தில் 36 சதவிகித வாக்காளர்கள் கன்சர்வேடிவ்களை ஆதரிக்கின்றனர்.

இந்த அதிரடி திருப்பம் ஆறு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலைமையின் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். அதாவது கன்சர்வேடிவ்கள் லிபரல் கட்சியை விட 20 சதவிகிதம் முன்னிலை பெற்று 46 சதவிகித ஆதரவுடன் இருந்தனர். ஜனாதிபதி ட்ரம்பால் தற்போது மொத்தமும் தலைகீழாக மாறியுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article