“வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை, மன்னாரில் மூன்று கிராமங்களில் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) விசேட கூற்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய மூன்று கிராமங்களில் மைதானங்களை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
“எனினும், அங்கு மைதானத்தின் பணிகள் நடைபெறவில்லை. ஊழல் நடைபெற்றதாகவே நாங்கள் சந்தேகிக்கின்றோம்” என்றார்.