20.3 C
Scarborough

இஸ்ரேலை மொத்தமாக சிதைப்போம் – ஈரான் அறிவிப்பு!

Must read

இஸ்ரேல் நகரங்களைக்  குறிவைத்து அழிப்பதோடு இஸ்ரேலை மொத்தமாக சிதைப்பதற்குரிய திட்டத்தை வகுத்துள்ளோம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால்  இஸ்ரேல் – ஈரான் இடையே பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்பை ஈரானிய  இராணுவத்தளபதி இப்ராஹிம் ஜபாரி அறிவித்துள்ளார்.

இதுபற்றி இப்ராஹிம் ஜபாரி கூறுகையில்,

‛‛சரியான நேரத்தில் இஸ்ரேலை தாக்க உள்ளோம். இதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளோம். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை அழிக்க இந்த திட்டம் கைக்கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு இஸ்ரேலும் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார்  கூறுகையில்,

‛‛யூதர்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்கும் தன்மை கொண்டவர்கள். நம்மை அழிப்பது தான் குறிக்கோள் என்று எதிரி கூறினால் அதை நம்ப வேண்டும். இதனை வரலாற்றில் இருந்து யூத மக்களான நாங்கள் கற்று கொண்டுள்ளோம். எனவே ஈரானை திருப்பி அடிக்க நாங்களும் தயார் தான்” என்று கூறியுள்ளார்.

இதேவேளை  தற்போது ஈரான் தொடர்ச்சியாக  தனது படைபலம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் சுரங்கம் அமைத்து ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் வீடியோ, கடல் வழியாக விரைவாக சென்று தாக்கி அழிக்கும் ‛ஸ்பீட் போட்’ உள்ளிட்டவற்றை ஈரான் வீடியோவாக  வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article