உள்ளூர் அதிகாரங்களைக் கட்டாயம் தேசிய மக்கள் சக்தியிடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரங்களை மற்றவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க தயார் இல்லை என சுமந்திரன் கூறினார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பிலும் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைச் சம்பவங்கள் வேண்டுமென்றே முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாகக் குறிப்பிட்டார்.
பாதாள உலகத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.