பாகிஸ்தானின் இரு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு, 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லொறி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதே போல் கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே பஸ் மற்றும் முச்சக்கரவண்டி மோதிய 11 பேர் உயிரிழந்ததோடு 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.