19.5 C
Scarborough

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள்

Must read

இந்தியா – உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மஹா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மஹா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மஹா கும்பமேளாவில் 6 நாட்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகின்றது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி திரிவேணி சங்கமத்தில் நீராடி, கங்கை வழிபாடு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மாசி பௌா்ணமி (பெப். 12), மஹா சிவராத்திரி (பெப். 26) ஆகிய 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளதால், பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மஹா சிவராத்திரியுடன் நிறைவடையவுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article