சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து டில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்துள்ளார்.
டில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க 48 தொகுதிகளிலும், ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பா.ஜ.க, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்துள்ளார். டில்லி ராஜ் நிவாஸ் பவனில் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அதிஷி வழங்கியுள்ளார்.