13.5 C
Scarborough

உணவு பண்டங்கள் முதல் மதுபானம் வரை… உக்கிரமாக திருப்பியடிக்கத் துணிந்த கனடா

Must read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கனேடிய இறக்குமதிகள் மீதான வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் 25 சதவீத இறக்குமதி வரிகளுக்கு உட்பட்ட அமெரிக்க பொருட்களின் முழு பட்டியலும்ம் வெளியிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பானம், வாகன பாகங்கள், ஆடை மற்றும் காலணிகள், அணிகலன்கள் மற்றும் உள்ளாடைகள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள், புகையிலை, மரக்கட்டைகள், காகிதம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு பொருட்களை இந்த வரி விதிப்பில் கனடா குறிவைக்க உள்ளது.

 

இதில் கனேடிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரி விதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் பதிவு செய்துள்ளனர்.

இரண்டு கட்டமாக கனடா வரி விதிக்க உள்ளது என்றே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டத்தில் 30 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக மக்கள் கருத்தை அறிந்த பின்னர் 21 நாட்களுக்கு பின்னர் 125 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க உள்ளனர். இந்த இரண்டாவது பட்டியல் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

மேலும் பயணிகள் வாகனங்கள், லொரி மற்றும் பேருந்து, பொழுதுபோக்கு வாகனங்கள் மற்றும் படகுகள், எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள், விண்வெளி பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கும் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரவிருக்கும் 25 சதவிகித வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சனிக்கிழமை உறுதி செய்தார். ஆனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கும் என்று நம்புவதாக மூத்த கனேடிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article