இலங்கையின் 77வது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் தலைவர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.