டொனால்ட் ட்ரப்பின் வரி விதிப்பிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இதில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.
கனடிய தமிழர் சமூகம், மார்க்கம் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர்கள் பங்கெடுத்தனர்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஒன்டாரியோ முன்னாள் முதல்வர் டக் ஃபோர்ட், முற்போக்கு பழமைவாதக் கட்சியின் ஸ்காப்ரோ வடக்கு வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரேமண்ட் ஷோ, அந்தக் கட்சியின் மாகாண சபைத் தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் விஜய் தனிகாசலம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட பிரதம அதிதிகளுக்கு அமோக வரவேற்பளித்த தமிழர்களை டக் ஃபோர்ட், கனடாவின் பொருளாதார எழுச்சிக்கு தமிழர்களின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும், ஸ்காப்ரோ வடக்கு வேட்பாளருமான ரேமண்ட் ஷோ, தமிழர்களின் பங்களிப்பு என்பது கனடாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.