14.8 C
Scarborough

போதையில் மோசமாக நடந்துகொண்ட வெளிநாட்டவர்கள்

Must read

வாதுவ பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பினை வெளிப்படுத்திய பெண் வரவேற்பாளர் ஒருவரை வலுக்கட்டாயமாக நீச்சல் குளத்திற்குள் தள்ளியதாக தகவல்கள் தெரவிக்கின்றன.அந்த விடுதியில் தங்குவதற்காக வருகைதந்திருந்த போலந்து நாட்டின் குழுவினரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் வரவேற்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் நீச்சல் குளத்தில் நீந்த வேண்டாமென பெண் வரவேற்பாளர் தெரிவித்ததை அடுத்து, எதிர்ப்புத் தெரிவித்த வெளிநாட்டு குழுவினர் அந்தப் பெண்ணை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளனர்.

விடுதி நிர்வாகம் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களிடம் கேட்டறிய முற்பட்ட வேளையில், அவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article