கனடா பிரதமர் பதவிக்கு இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண் போட்டியிடுகிறார்.
அவரது பெயர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50).
ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் ஆவார்.
அவர் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்!
ரூபி, பாலிவுட் ஸ்டைலில் கனடாவில் எடுக்கப்பட்ட Kyon? Kis Liye? என்னும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஹாமில்ட்டன் சீரியல் கில்லரான சுக்விந்தர் தில்லான் என்பவரது கொலை வழக்கைத் தழுவி அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
2003ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தில் ரூபி ஒரு பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
2004ஆம் ஆண்டு, அவர் பிராம்டன் தொகுதியிலிருந்து கனடா நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தான் அரசியலுக்கு வந்ததும், தான் நடித்த அந்த திரைப்படத்தின் டிவிடிக்கள் வெளியாகாமல் தடுத்தாராம் ரூபி. அதற்குக் காரணம், தனது படங்கள் விளம்பர நோக்கில் மார்பிங் செய்யப்பட்டதாக வாதம் முன்வைத்திருந்தார் அவர்.