19.5 C
Scarborough

கனடா மீது இரண்டு கட்டமாக வரி விதிப்பு: ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

Must read

கனடா மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமாக விவரித்துள்ளது.

அதாவது, இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக துறைசார் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா மீது வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கனடா மீது இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக ட்ரம்ப் தனது வர்த்தகச் செயலராக தேர்ந்தெடுக்க இருக்கும் ஹாவர்ட் லட்னிக் (Howard Lutnick) என்பவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, முதல் கட்டமாக இன்னும் சில நாட்களில் கனடா மீது வரிகள் விதிக்கப்பட உள்ளனவாம்.

அதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, வசந்த காலத்தில் மீண்டும் வரிகள் விதிக்கப்படுமாம்.

கனடாவிலிருந்தும் மெக்சிகோவிலிருந்தும், அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரும் நுழைவதே இந்த இரண்டு நாடுகள் மீதும் வரி விதிக்கக் காரணம் என ட்ரம்ப் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைவதையும் தடுக்க கனடா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது..

ஆக, அந்த நடவடிக்கைகளால் பிப்ரவரி 1ஆம் திகதி ட்ரம்ப் வரிகள் விதிக்காமல் விட்டால் கூட, இந்த வரிகள் பிரச்சினை இப்போது தீருவதாகத் தெரியவில்லை.

காரணம், அடுத்த வரி விதிப்பு திட்டம், அமெரிக்கா கனடாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு பொருளாக பட்டியலிட்டு, அவற்றை கனடா எப்படி கையாள்கிறது என்று கவனித்து, அதற்கேற்ப வரிகள் விதிப்பதற்காக, ஆவன செய்யுமாறு ட்ரம்ப் தனது அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்!

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article