19.5 C
Scarborough

பொலிஸ் அறிக்கையில் லோச்சனாவாக மாறினார் அர்ச்சுனா!

Must read

அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து,  பலத்த்தை காட்டி அச்சுறுத்திய சம்பவத்தில் சரியான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா என்று அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலும் ஒரு அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு மீண்டும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, அனுராதபுரம் தலைமையக பொலிஸாரின் கோரிக்கையை அடுத்து, ஒரு மனு மூலம் அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தொடர்புடைய கூடுதல் அறிக்கையைச் சமர்ப்பித்த அனுராதபுரம் தலைமையகக் பொலிஸார், இந்தப் போக்குவரத்து வழக்கில் சந்தேக நபராக அர்ச்சுனா லோச்சனா என்ற பெயர், அசல் பீஅறிக்கையில் முன்னர் ஒரு கவனக்குறைவு காரணமாகக் குறிப்பிடப்பட்டதாக நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்தது. இதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த போக்குவரத்து வழக்கில் சரியான சந்தேக நபரின் பெயரை ராமநாதன் அர்ச்சுனா என்று திருத்தி, சரியான சந்தேக நபரை ராமநாதன் அர்ச்சுனா என்று ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article