அமெரிக்காவின் விமானப்படைக்குரித்தான ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35என்ற போர் ஜெட் விமானம் நேற்று (28) பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.
இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது என்றும் விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து எட்ஜெக்ட் ஆகி வெளியே வெளியேறி குதித்ததால் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
F-35 போர் ஜெட் விமானம் ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.