16.1 C
Scarborough

நாயை தூக்கிலிட்ட பெண் கைது!

Must read

மாங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டுசுட்டானில் ஆட்டைகடித்து கொன்ற நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு ஒரு விசித்திர தீர்ப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கியதையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 49 வயது பெண் ஒருவரை மிருகவதை சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சோந்த சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நாய் கடித்து விட்டதாக பொலிஸில் முறையிட்டுள்ளார், இது தொடர்பான விசாரணையை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு பொலிஸார் மாற்றினார்.

இதனையடுத்து, குறித்த முறைப்பாடு தொடர்பாக இணக்கசபையில் நீதவான்களான ஒட்டுசுட்டான் ஓய்வு பெற்ற மகாவித்தியாலய அதிபர் ஒய்வு பெற்ற பாடசாலை அதிபர் கிராம அலுவலரின் தாயார் ஆகிய நீதிவான்களாக மூவரும் விசாரணையை மேற்கொண்டனர்

இதன் போது ஆட்டிற்கான நஷ்டத்தை வழங்குமாறு கோரிய நிலையில் நாய் உரிமையாளர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்த நிலையில் அதற்காக நாயை தருமாறு ஆட்டின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதையடுத்து நாயை ஒப்படைக்க நாய் உரிமையாளர் உடன்பாடு தெரிவித்து நாயை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து நாயை கொண்டு சென்ற ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயை தூக்கிலிட்டு கொன்று அதன் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்ததுடன் அதனை இணக்கசபை நீதவான்களுக்கு அனுபியுள்ளார்.

இதனையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்ற பெண்ணை மிருகவதை சட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை(27) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article