16.1 C
Scarborough

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

Must read

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பத்தில் தினமும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் குழு அதிகாரி ஒருவர்

”எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள். எங்களிடம் 2,000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன”. என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article