இந்தியாவின் உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொதுசிவில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் அமைந்தன .
நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இன்று முதல் பொதுசிவில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.