கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தென்பகுதியில் இன்றைய தினம் இவ்வாறு பலத்த காற்று வீசும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பகல் முதல் இரவு வரையில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கு 70 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
மரங்கள் முறிந்து விழக்கூடும் எனவும் மின்சாரம் தடைப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.