15.1 C
Scarborough

ட்ரம்ப் மிரட்டலை தொடர்ந்து பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்த கனேடியர்!

Must read

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில் லியாம் மூனி (Liam Mooney) எனும் கனேடியர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

“Canada is Not for Sale” என்ற வாசகத்துடன் கூடிய தொப்பிகளை தயாரித்து வெளியிட்டுள்ளார் மூனி.

இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்ட Ontario Premier டக் ஃபோர்ட் (Doug Ford), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒட்டாவாவில் நடந்த கூட்டத்தில் இந்த தொப்பியை அணிந்தது மிகவும் பிரபலமாகியுள்ளது.

இதனால் இத்தொப்பிகளுக்கான ஓன்லைன் ஆர்டர்கள் திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளன.

டிரம்பின் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கனேடிய பொருட்களுக்கு வரி விதிக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து, மூனி இந்த தொப்பிகளை உருவாக்க முடிவு செய்தார்.

இந்நிலையில், டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கூறியது கனடாவில் கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ஃபோர்டு, “கனடா விற்பனைக்கு அல்ல” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article