13.5 C
Scarborough

கனடாவிலிருந்து மகனை இந்தியாவிற்கு கடத்திய தந்தையை தேடும் பொலிஸார்!

Must read

கனடாவில் மூன்று வயது சிறுவனை இந்தியாவிற்கு கடத்தியதாக அவரது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

48 வயதான கப்பில் சுனக் என்ற நபரை தேடி வருவதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று வயதான சிறுவனை குறித்த நபர் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று மீண்டும் கனடா திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும் மகனும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நாடு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இந்த உத்தரவிற்கு அமைய குறித்த இருவரும் நாடு திரும்பி இருக்க வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவிற்கு நாடு திரும்பாத காரணத்தினால் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த இருவரையும் தேடி கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளனர்.

கணவன் மனைவி பிரிந்து வாழும் நிலையில் பிள்ளைகள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பிற்கு அடிபணியாது பிள்ளைகளை அழைத்துச் செல்லல் கனடாவில் கடத்தலாகவே கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article