தென் ஒன்றாரியோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் சுமார் 25 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெய்ரே, இன்னிஸ்பில் பகுதிகளில் பலத்த பனிப்புயல் வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
பெய்ரே, கோட்ரிச், இன்னிஸ்புல், ஓவன்சவுன்ட், ப்ளு மவுன்டன், ஸ்டார்ட்போர்ட் உள்ளிட்ட சில இடங்களில் பனிமூட்டம் மற்றும் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.