அடுத்த தேர்தலில் ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால் தற்போது காணப்படும் தேசிய கட்சிகள் அழிவடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
கடந்த தேர்தலிலே நாங்கள் ஒற்றுமையாக இல்லாததால், மக்கள் தங்களது கோபங்களைப் பல வழிகளில் காட்டியுள்ளனர்.
இனியாவது ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால், மக்களையும் மண்ணையும் உதாசீனப்படுத்துகின்ற கட்சிகளாகத்தான் நாங்கள் இருப்போம் என்பது தெட்டத் தெளிவான உண்மை.
அடுத்த தேர்தலில் ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால் தற்போது காணப்படும் தேசிய கட்சிகள் அழிவடையும் நிலை காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.