உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
இந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரோன்கள் நகரத்தை நெருங்கி வருவதாக விமானப்படை விடுத்த எச்சரிக்கைக்கு அமைய வான் பாதுகாப்பு எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் தீயணைப்பைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில அவசர சேவைப்பிரிவு இணைந்து செயற்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து உக்ரைனின் முதல் துணை பிரதம மந்திரி யூலியா ஸ்விரிடென்கோ தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.