16.1 C
Scarborough

உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா

Must read

உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வகை ரயில்களுக்கு  ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த ரயில் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.

வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த ரயில் ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ளது. சீனாவில் தற்போது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக சிஆர்400 புல்லட் ரயில் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த ரயிலானது மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை புரிந்துள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் ரயிலானது பல்வேறு சோதனை நிலைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமென சீனா தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article