இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை மேற்பார்வை செய்த பின்னர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாகவும் துறைமுக அதிகார சபைக்கும் பங்குள்ளது எனவும் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை, ஆனால் தனியார் துறையுடன் இணைந்து துறைமுக அபிவிருத்திக்காக செயற்படுவோம் என அமைச்சர் மேலும் கூறினார்.