இந்தியாவுடனான உறவை கனடா பிரதமர் சரியாக கையாளவில்லை என 40 சதவீதமான கனேடிய மக்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada (APF) என்னும் அமைப்பும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், இந்தியா – கனடா ஆகிய இருதரப்பு உறவுகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரிவர கையாளவில்லை என 40 சதவிகித கனேடியர்கள் கருதுவதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம், 32 சதவிகித கனேடியர்கள், இதற்கு மாறான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருக்கும்வரையில், இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என 40 சதவிகித கனேடியர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.