13.8 C
Scarborough

கனேடிய பெண்ணின் பரிசு அட்டையில் மோசடி

Must read

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை வைத்திருந்த பெண் ஒருவருக்கு ஏமாற்றம் கிட்டிய செய்தியொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண் 250 டொலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை வைத்திருந்ததுடன்
இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தாமல் வைத்திருந்ததால் ஏமாற்றமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த பெண் குறித்த பரிசு அட்டையை பயன்படுத்தி கொள்வனவு செய்ய முயற்சித்த போது இந்த 250 டாலர் பெறுமதியான பரிசு அட்டையில் வெறும் 1.5 டாலர்கள் மட்டுமே எஞ்சி இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனால் மிஸஸாகாவை சேர்ந்த கத்தரின் உச்சிடா என்ற இந்த பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

எவ்வாறாயினும், தாம் செல்லாத இடங்களில் தனது பரிசு அட்டையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏதோ ஒரு வகையில் தனது பரிசு அட்டை மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article