கனடா போஸ்ட் மற்றும் தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார இறுதியில் இடம் பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிற்சங்கத்தின் பதிலுக்கு காத்திருப்பதாக கனடா போஸ்ட் கூறுகிறது.
கனடா போஸ்ட்டின் விநியோகத்தில் அதிக நெகிழ்வுத் தன்மையை கொண்டுவரவும் தொழிலாளர் பிரச்சினையின் சில முக்கிய விடயங்களில் அக்கறை காட்டவுள்ளதாகவும் கனடா போஸ்ட் கூறுகிறது.
இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக அரசாங்கம் ஒரு மத்தியஸ்தரை நியமித்திருந்தது.
எனினும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் விடயத்தில் நீண்ட தூரத்தில் இருப்பதாக கூறி விவாதங்களை நிறுத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான தபால் ஊழியர்கள் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
விடுமுறை கப்பல் சேவை காலத்தின் ஆரம்பத்தில் கடித மற்றும் பொதிகள் விநியோகம் நிறுத்தப்பட்டது.
வேலை நிறுத்தம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க தபால் சேவை தற்போது கனடாவுக்கான தபால்களை ஏற்றுக் கொள்வதை நிறுத்தியுள்ளது.