கனேடியர் ஒருவர் தனது 76ஆவது வயதில் பட்டப்படிப்பொன்றை முடித்துள்ள நிலையில், அடுத்த பட்டத்தைப் பெறும் முயற்சியையும் துவக்கியுள்ளார்.
76 வயதில் பட்டம் பெற்ற கனேடியர்
டேவிட் ஜாக்சன் என்னும் கனேடியர், தனது 76ஆவது வயதில் Mount Royal பல்கலையில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு, ஏற்கனவே கணிதத்தில் பட்டம் பெற்றவர் டேவிட். பிறகு பல இடங்களில் வேலை செய்த டேவிடுக்கு கல்வியின் மீதான ஆர்வம் மட்டும் குறையவேயில்லை.
Dr. Scott Murray என்னும் வரலாற்றுத்துறை பேராசிரியரின் பயிற்றுவிப்பு முறையால் ஈர்க்கப்பட்ட டேவிட், 2007ஆம் ஆண்டு பகுதி நேரக் கல்லூரிப்படிப்பில் இணைந்தார்.
76 வயதில் பட்டம் பெற்ற கனேடியர்: சில சுவாரஸ்ய தகவல்கள் | 76 Year Old Man Graduated In Canada
இளைஞர்களுக்கு இணையாக வகுப்பில் ஆர்வம் காட்டுபவர் என ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் பாராட்டப்படும் டேவிட், சமீபத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
அடுத்தபடியாக, 2033இல் ஒரு பட்டம் பெறும் வகையில், மீண்டும் பகுதி நேரக் கல்லூரிப்படிப்பை டேவிட் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.