5.3 C
Scarborough

75வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய கனேடிய மூதாட்டி!

Must read

கனடாவின் கட்டினோ (Gatineau) நகரத்தைச் சேர்ந்த லிண்டா வுட், தனது 75வது பிறந்தநாளை சாதாரணமாகக் கொண்டாடவில்லை.

மாறாக, 12,000 அடி உயரத்தில் விமானத்தின் வாசலில் அமர்ந்து, வானில் பறந்து குதிக்கும் ஸ்கை டைவிங் கனவை நிறைவேற்றினார்.

தாம் 70வது பிறந்தநாளிலேயே இதைச் செய்ய நினைத்ததாகவும், கோவிட் பெருந்தொற்று காரணமாக அது சாத்தியமாகவில்லை எனவும் வுட் கூறியுள்ளார்.

இந்த குதிப்பு வெறும் சாகசத்திற்காக மட்டும் அல்ல எனவும் கடந்த 12 ஆண்டுகளாக தன்னார்வலராகச் செயல்பட்டு வரும் ஹொஸ்பிஸ் கெயார் ஒட்டாவா அமைப்பிற்காக நிதி திரட்டுவதற்கும் இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை 7,000க்கும் மேற்பட்ட நன்கொடை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article