ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னிகோவ் எரிமலை நேற்று தொடக்கம் நெருப்பை கக்க ஆரம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட 600 ஆண்டு கால அமைதிக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கடைசியாக 1450 ஆம் ஆண்டில் நெருப்பை கக்கியுள்ளது.
சமீபத்தில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்திய 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக இந்த எரிமலை செயல்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .