33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.’பிளேட்’ வகைப்பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பீகார் – அருணாச்சல பிரதேசம் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் வைபவ் சூர்யவன்ஷி தொடக்கம் முதல் அதிரடி காட்டினார்.

