19.5 C
Scarborough

5 டொலர் பணத்தாளில் கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

Must read

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox இன் புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது 22வது வயதில் பெடரல் அரசாங்கம் திங்கட்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கனேடிய நட்சத்திரமான Terry Fox கடந்த 1980ல் தனது மரதன் ஒப் ஹோப்பை நடத்தி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பரப்புரை மேற்கொண்டார்.

புற்றுநோயால் தமது காலை இழந்தவர் Terry Fox பாக்ஸ் முன்னெடுத்த மரதன் ஊடாக மொத்தம் 24 மில்லியன் கனேடிய டொலர் தொகையை திரட்டியிருந்தார்.

அப்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு கனேடியருக்கு 1 டொலர் என கணக்கிடப்பட்டது.

1981ல் அவரது புற்றுநோய் நுரையீரலுக்கு பரவிய நிலையில் தனது 22வது வயதில் அவர் மரணமடைந்தார்.

மிக இளம் வயதில் கனடாவின் உயரிய விருதான Companion of the Order of Canada விற்கும் அவர் தெரிவானார்.

அவரது நினைவாக ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் மரதன் போட்டிகளால் இதுவரை 850 மில்லியன் கனேடிய டொலர் திரட்டப்பட்டுள்ளது.

2020 இல் கனடா வங்கி முன்னெடுத்த 6 வாரங்கள் நீண்ட பொதுமக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்வில், இறுதி 8 பேர்களில் ஒருவராக பாக்ஸ் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 600 பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 5 டொலர் பணத்தாளில் பாக்ஸ் புகைப்படம் இடம்பெறுவதால், அவர் சார்பிலான சேவை நடவடிக்கைகளுக்காக மக்கள் 5 டொலர் தாள்களை நன்கொடை அளிப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது 5 டொலர் தாளில் இடம்பெற்றுள்ள Sir Wilfrid Laurier இனி 50 டொலர் தாளில் இடம்பெறுவார் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article