15.1 C
Scarborough

48 மணிநேரத்தில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் !

Must read

கடந்த 48 மணி நேரத்தில் கிரேக்கத் தீவுக்கு அருகில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் சாண்டோரினியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) திகதி முதல் சுமார் 9,000 பேர் தீவை விட்டு வெளியேறியுள்ளனர் . கடந்த செவ்வாய்க்கிழமை (04 ) அவசர விமானங்கள் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளன.
தீவுக்கு அருகில் கடந்த இரண்டு நாட்களில் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன, இந்த நிலநடுக்கம் இன்னும் தொடரக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாண்டோரினியின் வடகிழக்கே உள்ள ஏஜியன் கடலில் அதிகளவான நிலநடுக்கங்கள் பதிவாகின, பிற்பகல் நடுப்பகுதியில் 5 ரிக்டர் அளவிலான ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
பல நாட்களாகத் தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுவதால், சிலர் தங்கள் மகிழுந்துகளிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article