3 C
Scarborough

40 வயதிலும் குறையாத அழகு.. ரகசியத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால்!

Must read

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் தனது வசீகர தோற்றத்தால் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் அதே பளபளப்பு அழகுடன் இளமையாக காட்சி தரும் காஜல் அகர்வால் தனது இளமை அழகின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வயதிலும் தனது அழகை குறையவிடாமல் பாதுகாத்து வரும் காஜல் அகர்வால், இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“எனக்கு தற்போது 40 வயது. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையில் என்னிடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்ய சொன்னார்கள். படங்களில் பிசியாக இருந்தாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை ஒருபோதும் தவிர்ப்பதில்லை. ஒவ்வொரு நாளும் உடலுக்கு தேவையான உடற்பயிற்சிகளையும் செய்கிறேன். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவேன். தேங்காய் தண்ணீர் என் அன்றாட உணவில் அவசியமாக இருக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள் பச்சை காய்கறிகளில் உள்ள ஊட்டசத்துகள் மற்றும் கொட்டைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் ஆகியவற்றிலிருந்து உடனடி ஆற்றல் கிடைக்கிறது. வயதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் உடற்பயிற்சியை தொடர்ந்து பொருட்படுத்தி தவறாமல் செய்து வருகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article