14.6 C
Scarborough

30  ஆயிரம் கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டம்!

Must read

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது மேலும் 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது,  இந்த சமர்ப்பணங்களை  அவர் முன்வைத்தார்.

சில கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பு பெற்றதைக் குறிக்கும் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக துஷார உபுல்தெனிய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளுக்குள் ஆழமான தோல்வியை இந்த வெளிப்படுத்தல்கள் பிரதிபலிக்கின்றன என்றும், சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் வேரூன்றத் தொடங்கியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பிடும் இவ்வாறான வலையமைப்புகளை அகற்ற சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் ஆதரவு வழங்குமாறு அவர் நீதித்துறையை வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்து பிரத்தியேகமாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்  குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article