30 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் ஒருவர் தமது 80 ஆவது வயதில் அவரது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இந்தியாவின் மஹாரஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபரின் மகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பல ஆண்டுகளாக காணாமல் போயுள்ளார்.
இவர் சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வேறொரு நகரில் கவனிப்பாரற்ற நிலையில் வசித்து வந்த நிலையில் காவல்துறையினர் மீட்டு சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
பின்னராக இவர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் அவரின் உறவினர்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
வைத்திய சிகிச்சைகளுக்கு பின் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இவர் தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டுள்ளார்.