கனடா அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளத்தை விரிவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழில்நுட்ப துறையில் ஏற்படும் புதிய தொழிலாளர்கள் தேவையால், இந்நிறுவனங்களில் பல புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப துறையில் மட்டுமல்லாது, சேவை துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமான துறைகளிலும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் பொதுமக்களின் வருமான நிலை மேம்பட்டு, பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.