0.9 C
Scarborough

3-வது கணவரை பிரிந்தார் மீரா வாசுதேவன்

Must read

தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்.

பின்​னர் நடிகர் ஜான் கொக்​கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற மீரா வாசுதேவன், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார். இப்போது அவரையும் பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பதி​விட்​டுள்ள மீரா வாசுதேவன் ”2025 ஆகஸ்ட் முதல் தனி​யாக இருக்​கிறேன் என்​பதை அதி​காரப் ​பூர்​வ​மாக அறிவிக்​கிறேன். என் வாழ்க்​கை​யின் மிக அழகான, அமை​தி​யான கட்​டத்​தில் இப்​போது இருக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article