16.3 C
Scarborough

25 வயது நபருக்கு 16 ஆண்டுகள் சிறை!

Must read

கனடாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளில் ஒன்றில், 25 வயதான டைமூர் பாஷா (Taymoor Pasha) என்பவருக்கு 16.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை லண்டன் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.

கடந்த 2023 ஜனவரி மாதம், “Project Oasis” என்ற குற்ற விசாரணையின் போது பாஷா கைது செய்யப்பட்டார்.

அவர்மீது போதைப்பொருள் கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டபோது, லண்டனில் பிறந்து வளர்ந்த பாஷா, ‘ஒசாமா’ என்ற புனைப்பெயரில் லண்டன் மற்றும் சார்னியா பகுதிகளில் கோக்கெயின், பென்டனில், மற்றும் மெத்தாம்பட்டமின் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

சோதனையின் போது 15 கிலோ பென்டனில், 3 கிலோ கோக்கெயின் என்பன மீட்கப்பட்டதாகவும் இவை அனைத்தினதும் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர்கள் மதிப்பு என மதிப்பீடு செய்யப்பட்டது.

2023 நவம்பரில், பாஷா தனது மீதமுள்ள ஒரு குற்றச்சாட்டுக்கு (போதைப்பொருள் விற்பனை நோக்கில் வைத்திருத்தல்) குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

“பாஷா ஒரு மொத்த வணிகக் கடத்தலாளியாகச் செயல்பட்டுள்ளார். லண்டனில் நிலவும் ஓபாயிட் (opioid) நெருக்கடியையும் கருத்தில் கொண்டு தண்டனை அளிக்கிறேன் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article