அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் உலகின் 25 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்திருக்கும் நிலையில் இலங்கைக்கு 44 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் முதல் இந்த வரி விதிப்புகள் அமுலுக்கு வருமென வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக வியட்நாமிற்கு 46 சதவீதமாகவும், சீனாவுக்கு 34 சதவீதமாகவும், இந்தியாவிற்கு 26 சதவீதமாகவும் வரி விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதேபோல் ஐரோப்பிய சங்கத்துக்கு 20 சதவீதமும் தாய்லாந்துக்கு 32 சதவீதமும் ஜப்பானுக்கு 24 சதவீதமாகவும், தென் கொரியாவிற்கு 25 சதவீமும் வரி விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய்லாந்துக்கு 36 சதவீதமாகவும், சுவிஸ்லாந்துக்கு 31 சதவீதமாகவும் பிரித்தானியா,பிரேசில்,சிங்கப்பூர்,சிலி, அவுஸ்திரேலியா, துருக்கி, கொலம்பியாவிற்கு 10 சதவீதமாக வரி விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷூக்கு 37 சதவீதமாகவும் பாகிஸ்தானுக்கு 29 ஆகவும், பிலிபைன்ஸூக்கு 17 சதவீதமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இறக்குமதியை மேற்கொண்டிருந்தது. இது இலங்கையின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரி விதிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.