கனேடிய பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்தால், அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க கனடா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25% இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்தால், கனடா 150 பில்லியன் கனேடிய டொலர் (அமெரிக்க $105 பில்லியன்) மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா சில அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உரிய பட்டியலை உருவாக்கியிருக்கிறது.
டிரம்ப், கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புகலிட மக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும் வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, கனடா நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மானியங்கள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்ரூடோ தனது அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். அதே சமயம், உள்நாட்டில் அரசியல் குழப்பங்களும் நிலவுகின்றன.