17.5 C
Scarborough

204 இலக்கை எளிதாக எட்டியது குஜராத் டைட்டன்ஸ்

Must read

ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் 6 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். அதிகபட்சமாக அக்சர் படேல் 32 பந்தில் 39 ரன்களும், அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களம் இறங்கியது. சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 74 ரன்னாக இருக்கும் போது சாய் சுதர்சன் 21 பந்தில் 36 ர்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. குறிப்பாக பட்லர் பட்டையை கிளப்பினார். 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11.2 ஓவரில் 100 ரன்னையும், 14.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது.

15ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பட்லர். கடைசி பந்தில் ரன் அடிக்கவில்லை. குஜராத் 17 ஓவரில் முடிவில் 179 ரன்கள் குவித்திருந்தது.

18ஆவது ஓவரில் குஜராத் 10 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். அவர் 34ஆவது பந்தில் 43 ரன்கள் எடுத்தார். பட்லர்-ரூதர்போர்டு ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் குவித்தது. அடுத்து ராகுல் டெவாட்டியா களம் இறங்கினார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் டெவாட்டியா சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பட்லர் 54 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article