டொராண்டோ (Toronto) மாநகரத்தின் முன்னாள் மேயர் ஜோன் டோரி (John Tory), வரும் 2026 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட தவறான உறவு வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
மீண்டும் போட்டியிடும் ஆர்வம் இருந்தபோதிலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் தனது குடும்பத்தினரைப் பாதிப்பதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2014 முதல் தொடர்ந்து மூன்று முறை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டோரி, தற்போதைய மேயர் ஒலிவியா சௌவிற்கும் (Olivia Chow) தனக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையிலும் பின்வாங்கியுள்ளார்.
ஒலிவியா சௌ அவரது நீண்டகால சேவையைப் பாராட்டியுள்ள நிலையில், தற்போது பிராட் பிராட்போர்டு (Brad Bradford) மட்டுமே வேட்பாளராகப் போட்டியிட முன்வந்துள்ளார்.

