2025 இல் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 2025-ல் 3% முதல் 5% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உணவு விலைக் கணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த 15-ஆவது ஆண்டு அறிக்கையை டல்ஹௌசி பல்கலைக்கழகம், குவெல்ப் பல்கலைக்கழகம், சாஸ்காட்ச்சுவான் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஒரு கனேடிய குடும்பம் 2025ல் உணவுக்காக $16,833.67 செலவிட வேண்டியிருக்கும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது $800 அதிகம் ஆகும்.
– இறைச்சி விலை 4% முதல் 6% வரை அதிகரிக்கலாம்.
– பசுமை குறைவால் மாடு வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து, இறைச்சி விலை உயர்ந்துள்ளது.
– மேலும், கால்நடைகளுக்கான உணவு விலை அதிகரிப்பு மற்றும் வட்டி வீத உயர்வுகளும் இதற்குக் காரணம்.